

எப்பவும் ஒரே கீரையை செய்யாமல்…..சற்று வித்தியாசமாக பல நன்மைகள் தரும் துத்தி கீரையை சமைத்து பாருங்கள்!!!
தலை முதல் பாதம் வரை அனைத்து நோய்களுக்கும் பயன்படும் துத்தி கீரையை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகிறோம். உணவே மருந்து என்பார்கள். ஆனால் தற்போது உணவே நமக்கு விஷமாக மாறி விட்டது. ஆரோக்கியமான உணவுகளை தவிர்த்து விட்டு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு வகைகளை நாடி செல்லும் காலம் இது. நம் முன்னோர்கள் வலிமை மிக்கவராகவும், நீண்ட ஆயுட்காலம் கொண்டவர்களாகவும் வாழ்ந்ததற்கு அவர்கள் எடுத்து வந்த உணவே காரணம்.
அப்படி நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு கீரை தான் இந்த துத்தி கீரை. தினமும் காலை வேலையில் வெறும் வயிற்றில் ஐந்து துத்தி இலைகளை சாப்பிட்டு வந்தால் மூலம், பவுத்திரம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் குணமாகும். அல்லது துத்தி கீரைரை நன்றாக சுத்தம் செய்து விட்டு பாசிப்பருப்போடு வேக வைத்து நெய் கலந்து சாப்பிட்டு வந்தாலும் மலச்சிக்கல் தீரும்.
ஒரு கையளவு துத்தி கீரையை எடுத்து நீரில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் மற்றும் நமைச்சல் ஆகியவை நீங்கும். எலும்பு முறிவிற்கு துத்தி கீரை சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இந்த கீரையை உணவில் சேர்த்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
வாரம் ஒரு முறை இந்த கீரையை உணவில் சேர்த்து வர குடல்புண் ஆறும். சிறுநீர் வெளியேறாமல் இருந்தால் சிறுநீரக கோளாறு வர வாய்ப்பு உள்ளது. துத்தி இலையை ரசம் செய்து பருகி வர சிறுநீர் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியேறும். துத்தி இலையை அரைத்து முகப்பருக்களின் மேல் போட்டு வர பருக்கள் கொட்டி விடும்.
வாயு சம்மந்தப்பட்ட பிரச்சனைக்கும், இடுப்பு வலிக்கும் இது ஒரு சிறந்த மருந்து. மலச்சிக்கலால் உண்டாகும் பூச்சிகள் ஒழிய இந்த கீரையை அடிக்கடி கடைந்தோ பொரியல் செய்தோ உட்கொள்ள வேண்டும். துத்தி இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் வாய் கொப்பளித்து வர ஈறுகளில் உள்ள கோளாறு அனைத்தும் நீங்கும்.
துத்தி பூவை காய வைத்து பொடியாக அரைத்து தினமும் இரவு ஒரு டம்ளர் பாலில் ஒரு தேக்கரண்டி பொடி கலந்து குடித்து வர உடல் சூடு குணமாகும். இத்தனை நன்மைகள் அடங்கிய துத்தி கீரையை நிச்சயமாக நீங்கள் உங்கள் உணவில் சேர்த்து பயனடையுங்கள்.